Piravi | Massu Engira Masilamani | பிறவி என்ற தூண்டில்


இந்த பாடல் யாருக்கும் புலப்பட்டு இருக்காது ஆனால் இப்பொழுது கேட்டு பாருங்கள் இதயம் சற்று அமைதி கொள்ளும்.
கற்பனையோ , கதையோ இறந்த ஆன்மாவின் ஆசைகள் என்று சென்றால் ஒவ்வொரு ஜீவனின் தாகங்கள் தான் ப்ரமிக்க வைக்கிறது.
மீண்டும் ஒரு ஜென்மம் வேண்டாம் என்று வாழும் போது தோன்றும் ஆனால் மரணம் வரும் தருவாயில் ஆசைகளை அற்பமாய் என்ன முடியாது..
ஆழ் சிறையில் ஆயிரம் கனவுகள் காலம் அதை மறந்தாலும் சில தருவாயில் நினைவிற்கு வரும்.அந்த கனவுகள் கேள்வி ஒன்றை ஏந்தி நம்மை பார்க்கும்.நீல் துயரம் பிறவி நிலையும் கடந்து செல்லும்..
விஜயலட்சுமி கண்ணம்மா பாடினாலும் நாட்டுப்புற பாடலுக்கென இருந்தாலும் இந்த பிறவி கானத்தை பாடியிருப்பார்...

ஆசைகளில் ஒன்றாக ஒருவர் தன் காதலியை சந்தித்து தீரா அன்பை வெளிப்படுத்த சொல்வார் அந்த இல்லத்திற்க்கு சென்று பார்த்தால் மூப்பு தட்டி நரை பற்றி காதலி இருப்பார்...
அவர்களின் நெற்றியில் ஒரு முத்தமிட்டு பணிவார் இருக்கும் காலம் மிக சிறியது.

யார் மடிமீதும் தலைசாய்த்து அழுது தீர்த்து விடுங்கள். எனினும், அவள் மடிசாய்ந்து அழும் போது விழிநீர் துடைத்து, தலை கோதி, அன்பின் பெருக்கில் நெற்றியில் இதழ் பதிக்கும் மாயக்கணங்களுக்காய் ஏங்க வைக்கும்படியாக...

Comments