நேசம்


என்னிடமிருக்கும்
உன் ஞாபகங்களை
சிலுவையில் அறைகின்றார்கள் சகி
மண்டியிட்டு வேண்டியும்
உயிர்த்தெழும் பொழுதெல்லாம்
உடனிருக்கும் நீ உறைந்து போகின்றாய்
நேசம் என்பது சிறு தீப்பொறி
தனல் காதலென்பேன்
பிரிவு புகையென்பேன்
சிக்கியதால் சாம்பலானேன்
நீ ஆசிர்வதிக்கப்படுவாயாக


Comments