Iyarkai | இயற்கை
காதல்ல சுகமே காத்திருத்தல் தான். ஆனா இது சில நிலைல சுமையாவும் மாறிடுது....நாட்கள் நகர நகர மென்மையா வீசுர காத்து கூட பாறைய அறிச்சிடும். . அப்படி தான் , எவ்வளோ உறுதியா இருந்தாலும் காலம் மனச அறிச்சிடுது.மனசோட பின்பம் மாறிடுது... ஆனாலும் நினைவுகளோட தாக்கம் குறையுறதில்ல.......
காத்திருக்குற காதல் நினைவுகள தேக்கி வச்சிருக்கும்...நினைவுகள்ள வாழுற அவள
நிகழ்வுக்கு கொண்டுவற்றது அந்த கப்பல வர ஒலிதான்...ஒவ்வொரு முறையும் கப்பல பாக்கும்பேதும் கேப்டன எதிர்பார்ப்பா... இந்த முறையும் அவன் வந்திருக்கமாட்டான்....
உலகம் பூறா சுத்தி தழிம் மண்ண முத்தமிட்டு வருவான் படத்தோட நாயகன்... அவ கண்கள்ல இருக்க ஏக்கம் இவன கவரும்....
காதல்ல உணரமுடியாத ஒன்னு இருக்குனா அத காதல் எப்ப வந்த்துங்குற தருணம் தான்...ஒரு நொடிப்பொழுதுல அது மனசுல ஊடுறுவும்.....
இவ தன் காதல பத்தி அவன் கிட்ட சொல்லும் போதுலா ,அவனோட காதல் வேர் துளிர்க்கும்...
ஒரு நிலைல அவன் தன் காதல அவ கிட்ட சொல்லிடுவான் ....
அப்ப வர பாட்டுதான் "#பழைய_குரல்_கேட்கிறதே_யாரோ_யாரோ"
மனசுல இருக்க காதலன் கரைய தான்டியும் , தன்ன காதலிக்குற ஒருத்தன் கரையிலயும் , அவ அந்த சிதஞ்ச லையிட் அவுஸ்லயும்னு இந்தப் பாட்டு வலியோட ஆரம்பிக்கும்.
"கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில்
இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ"....
தன் காதல அவ ஏத்துக்காத வலி ,ஆனாலும் அந்த கேப்டன தேட இவன் உதவி செய்யுவான்...அதுல அவனுக்கு ஒரு சயநலமும் இருக்கும் ....தேடின பிறகு ஒருவேளை அந்த கேப்டன் கிடைக்கல்லனா அவ தன்ன காதலிப்பாங்குற ஒரு நம்பிக்கை அதுக்காக தான் காத்திருப்பான்...அங்க தான் "#காதல்_வந்தால்_சொல்லியனுப்பு " பாடல் வரும்
"சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு, ஒரு சாவை புதைக்க சக்தி கேட்டேன் காதல் வந்த பின்பு"
"கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம கூடுதடீ ......"
"நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர்பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி"
இந்த வரிகளுக்கு இடையில சில ஆங்கில வரி வாக்கியமா பின்னனியில வரும் அது உயிர உருக்கும்....
"Baby tell me u love me ,its never late don't hesitate"....
வாழ்க்கயில எந்த நொடி எப்படி மாறும்னு யாருக்கும் தெரியறது இல்ல .....மனசுல ஒருத்தன் ,கண்ணெதிர்ல ஒருத்தன் ,இவங்க ரெண்டு பேருக்கு இடையில இவ வாழ்க்கை...
கடவுள்கிட்ட இதற்கான தீர்வ விடனும் இவ முடிவெடுத்தா ....ஆனா ரெண்டு பேருமே இல்லாம தன் வழக்கை போய்டுமேனு ,ஷாம்ம கல்யாணம் செஞ்சிக்க சம்மதிப்பா....அந்த சந்தோஷம் தான் " #அலயே_அலயே " பாட்டு...
"ஒரு துளியானேன் உன்னாலே
இன்று கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக ஒரு வார்தை சொன்னாலே"
அவனோட சில நொடி சந்தோஷம் அந்தப் பாட்டுலயே முடுஞ்சிடும்...அந்த கேப்டன் அவளுக்காக திரும்பி வந்த ,அவ ஆசபட்டா மாதிரி அவ கையில மோதிரம் போட்டுடுவான்.....
Comments
Post a Comment