அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் அஜீத்…!

ஷூட்டிங்கின் போது பெரும் விபத்தில் சிக்க இருந்த அஜீத், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பில்லா-2 படத்திற்கு பிறகு அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒருபடத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்து வருகி்ன்றனர். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜீத் கம்யூட்டர் கேக்கராக நடிப்பதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடந்து வருகிறது.




இந்நிலையில் இப்படத்தின் ஒரு சண்டைக்காட்சி மும்பையில் படமாக்கப்பட்டது. அஜீத் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு தாவுவது போன்று ஒரு காட்சி. இந்தக்காட்சிக்கு டூப் போட்டு கொள்ள டைரக்டர் சொல்லியும், அதை கேட்காமல் தானே நடிப்பதாக அஜீத் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தக்காட்சியை படமாக்கியபோது, அஜீத் ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு தாவும்போது எதிர்பாரா விதமாக சிலிப்பாகி விழுந்துவிட்டார். இதில் அஜீத்துக்கு வலது காலில் அடிப்பட்டது. நல்லவேளையாக சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

Comments