ஓவர் உடற்பயிற்சி உடம்புக்கு ஆகாது. . ?

அஜீத்:

 

             சிக்ஸ்பேக் உடம்பை வளைத்து நெளித்து முறுக்கேற்றி வில்லனுடன் மோதுவதுதான் லேட்டஸ்ட் சினிமாவின் பேஷன். சூர்யா, சிம்பு, விஷால் என்று பலர் இந்த முயற்சியில் இறங்கி பலப்பரீட்சை நடத்தியவர்கள். இவர்களெல்லாம் செய்வதைப்பார்த்து தற்போது விஷ்ணுவர்தனும் தான் இயக்கும படத்தில் அஜீத்தை சிக்ஸ்பேக்குக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் மாதக்கணக்கில் அவரும் ஜிம்மே கதியென்று கிடக்கிறார்.

இதைப்பார்த்து, அஜீத்தின் அபிமானிகள் சிலர், இந்த விஷப்பரீட்சையெல்லாம் வேண்டாம் என்று அவரை தடுத்து வருகிறார்கள். காரணம், ஏற்கனவே உடம்பை குறைக்கிறேன் என்று சொல்லி திருப்பதி உள்பட சில படங்களில் நடித்தீர்கள். அப்போது உங்கள் முக அழகே போய்விட்டது. அந்த அஜீத் திரும்பவும் வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். அதனால் இதுவரை சிக்ஸ்பேக்கிற்கு உடம்பை மாற்றிக்காட்டுவேன் என்ற மனஉறுதியுடன் போராடி வந்த அஜீத், இப்போது ஓவர் உடற்பயிற்சி என் உடம்புக்கு ஆகாது என்று சிக்ஸ்பேக் முயற்சியை தள்ளி போட்டிருக்கிறாராம்.

Comments