எனக்கு முக்கியத்துவம் வேண்டாம்..?
எனக்கு முக்கியத்துவம் வேண்டாம்; கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் ! அஜித் ?
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு தல என்று பெயரிட முடிவு செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் அஜித், எனக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் வேண்டாம்; படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பெயர் சூட்டுங்கள் என்று பெருமிதத்துடன் கூறிவிட்டார். அஜித்தை ரசிகர்கள் தல என பட்ட பெயரிட்டு அழைக்கின்றனர். படங்களிலும் அவரை தல என்று சக நடிகர்கள் சொல்வதுபோல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த
படத்துக்கு பல மாதங்களாக தலைப்பு வைக்காமல் உள்ளது. நிறைய தலைப்பு தேர்வு
செய்து இறுதியில் பொருத்தமாக இல்லை என்று ஒதுக்கி விட்டனர். இந்நிலையில் தல
என்ற தலைப்பை படத்துக்கு வைக்கலாம் என எழுத்தாளர் சுபா யோசனை சொன்னார்.
இயக்குனருக்கும் அது பிடித்தது. ஆனால் அஜித் அதை ஏற்கவில்லை. கதைக்கு
தேவையான தலைப்பை தேர்வு செய்து வையுங்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு
முக்கியத்துவம் அளிப்பது போல் எதுவும் செய்யாதீர்கள், என்று கூறி
விட்டாராம்.
Comments
Post a Comment