கண்ணா... இது எப்படி இருக்கு?
சர்தார்ஜி ஜோக்ஸ் போல இணை யத்தில்
ரஜினிகாந்த் ஜோக்ஸும் ரொம்பப் பிரபலம். வேறு பல ஹாலி வுட் நடிகர்களைக்
கிண்டல் செய்யப் பயன்படுத்தப்பட்ட அதே வரிகளை ரஜினிக்கும் எடுத்து
அடித்துவிடுகிறார் கள். நெட்டில் இது பழசு என்றாலும், நம்ம மக்களுக்காக
மறுபடியும் எடுத்து அடிக்கிறோம்...
ரஜினி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.
பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான ரஜினி 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.’
ரஜினிகாந்தின் மெயில் ஐ.டி.gmail@rajnikanth. com.
ஒரு நாள் ரஜினிகாந்த் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.
2012-ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் ரஜினிகாந்த் 3 வருட வாரன்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிறார்.
And, the Rajnikanth award goes to Oscar....
ரஜினி, ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் - ப்ளூடூத் வழியாக.
ரஜினி ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி ரஜினிக்கு மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.
ரஜினி, இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டார். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.
கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் ரஜினியிடம் இருந்து வந்திருந்தன.
ரஜினி, தனது தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக!
நோக்கியா விளம்பரத்தில் கை குலுக்கிக்கொள்ளும் இரண்டு கரங் கள் யாருடையவை என்பது ரஜினிக்கு மட்டுமே தெரியும்.
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோது, அதை முதன்முதலில் ரஜினியிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக ரஜினி குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.
ரொனால்டினோ: என் காலால் ஒரு முறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...
ரஜினிகாந்த்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?
கடவுள் ரஜினி நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை ரஜினிகாந்த்.’
ரஜினி ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.
ஒருமுறை ரஜினிகாந்த் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது. சுவிஸ் பேங்க் உருவானது.
ரஜினிகாந்த் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: ரஜினியின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.
ரஜினிகாந்த் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான கதை இதுதான்.
Comments
Post a Comment