Maryan Climax
"நீ என்ன Miss பண்ணியா..?"
" நான் உன் கூட இல்ல என்டத நீ feel பண்ணியா..? "
இப்படி ஒரு பொண்ணு நம்மிடம் கேட்கும் போதுதான் நாமே கொஞ்சம் யோசிக்கின்றோம் எந்த இடத்துல அவங்கள நாங்க Miss பண்ணினோம் எந்த கணம் அவளின் இன்மை என்னை வாட்டியது என்று. சில சமயம் அவளின் வெறுமையை நாம் உணர்ந்திருப்போம் இல்லை அவளின் நினைவுகள் அந்த வெறுமையை நிரப்பியிருக்கும்.
ஆனால் அப்படி அவள் நம்மிடம் கேட்க காரணம் அவள் அதை உணர்ந்திருப்பாள் ஆக அதே போல நீயும் உணர்ந்தாயா என்பதை கேட்டறிதலில் அவர்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம். அப்படி கேட்கும் போது பதில் ஆம் என்பதாக அமைந்துவிட்டால் அடுத்த நொடி "எவ்வளவு Miss பண்ணின?, ஏன் என்ன Miss பண்ணின?" என்ற கேள்விகள் நம்மை வந்து சேரும். அதற்கு காரணம் பிறரால் நேசிக்கப்படுதலை பெண்கள் அதிகம் விரும்புவதால் ஆகும்.
' Miss you' என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு வாழ்தலின் பகுதியில் இல்லாமை என்ற உணர்வின் வெளிப்பாடு. நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை விட்டு பிரிந்திருந்த வேளையில் மட்டும் சொல்லப்படுவது அல்ல Miss you. தூரத்தே இருக்கும் போது அருகில் நீ வேண்டும் என்ற ஆசையாகவும் அது இருக்க கூடும்.
நமது இன்மையின் வலியை உணரும் ஒருவர் கூறும் ' Miss you' என்பது ' Love you' என்பதை விட பெரிது 💚 - Luxshan
Comments
Post a Comment