செரீனா - மங்களம் - செல்வி


முதல் காதல் என்பது எல்லாருக்குமே ஒரு வசந்தம் தான், இங்கு நான் முதல் காதல்னு சொன்னதை நல்லா உள்வாங்கிக்கொள்ளனும் ஏனெனில் காதல் ஒரு குளம் அல்ல ஒரே இடத்தில் நிற்பதற்கு, அது ஒரு ஆறு. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஏதோ காதல் தோற்றுப்போனால் எல்லாமே மூழ்கிப் போவது போல பேசுவதெல்லாம் பிதற்றல். என்னுடைய இந்தக் கருத்து பல பேருக்குப் பிடிக்காமல் போகலாம், எனினும் என்னுடன் சிலர் இருப்பீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் முதல் காதல் முதலாக இருக்கலாமே தவிர முடிவாகிப் போகக்கூடாது என்பது எனது விருப்பம்.

இதைத்தான் பெரியார் மிக அழகாக சொல்லியிருப்பார்,"‘காதல்’ என்பது ஒரு தெய்வீகச் சக்தியால் ஏற்பட்டதென்றும், அது என்றும் மாற்றப்பட முடியாததென்றும், ஆதலால், ஒரு தடவை காதல் என்பது ஏற்பட்டுவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறகு அதை மாற்றிக் கொள்ளக் கூடாதென்றும் சொல்லப்படுவது நிர்பந்தக் காதலே". இதையெல்லாம் பார்த்துவிட்டு நான் காதலுக்கு எதிரி என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம். சமீபத்தில் நான் பார்த்து ரசித்த வயது முதிர்ந்த காதல் காட்சிகள் ஏற்படுத்திய தாக்கம் தானிது.
காலா - பார்த்த அந்த முகம் அப்டியே என் நினைவில இருக்கு. 
செரீனா - பயமா இருந்துச்சு நீ பார்த்த அந்த பார்வை.
காலா - ஹா ஹா ஹா ஹா (பெருமிதச் சிரிப்பு) தெரியும், என்னைப் பார்த்ததும் நீ முட்டிய மறைச்சுகிட்ட, ஷால் எடுத்து தோள்ல போட்டுக்கிட்ட, அன்னிக்கு நீ ரோஸ் சட்டையும், பிரவுன் skirtம் போட்ருந்த, இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு (ஆண்களால் மட்டுமே இந்தளவுக்கு ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்)
செரீனா - ப்பா, இப்படி ஞாபகம் வச்சிருக்க, என்ன உனக்கு அவ்ளோ பிடிக்குமா??
காலா - ரொம்பபப.., இப்போ வரைக்கும்.ன்னு சொல்லி முடிக்கும் போது அந்தக் காட்சி கண்டிப்பா நம்ம நம்மோட முதல் காதலியை நினைக்கும்படி செய்யும். ஏன்னா பிரிந்து சென்றாலும் காதல் காதல் தான. ஆனால் அதைத் தொடர்ந்து செரீனா " நீ எனக்கில்லைன்றத என்னால நம்ப முடியலனு சொன்ன அடுத்த நொடி, காலா - எனக்கென்னமோ செல்வி உன் பக்கத்தில நின்னு என்னைப் பார்த்துக்கிட்டே இருக்கப்போல இருக்கு, அவ தான் எனக்கெல்லாமே னு சொல்லிட்டு என்னை இனிமேல் கரிகாலனு கூப்பிடாதான்னு சொல்லிட்டுப் போறப்போ அந்த மனைவியுடனான காதலின் புரிதல் - புல்லரிப்பு - இதுவும் காதல் தான். காதல் என்பது ஒரு உணர்வு, தெய்வீகமெல்லாம் ஒண்ணுமில்லை, "அடேய் அப்போ காதல் தோற்கும் பொழுது வலிக்காதா உனக்கெல்லாம், கல்லா நீ" என்று கேட்பீர்கள், அந்தத் தோல்வியின் வலி நிச்சயமிருக்கும் மாறாக அது அப்பெண்/ஆண் மீதென்றால் இல்லை என்பதே என் கருத்து. அவளுடனோ/அவனுடனோ நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டோமே அதை வேறு எவனோ/எவளோ ஒருவர் வாழப்போவது தான் அவ்வலியைத் தரும். அதக்கடந்து போக ஒருசில நாட்களாகும், ஏன் வருடங்கள் கூட ஆகலாம், ஆனால் கடந்து செல்வது தான் வாழ்க்கை. இதைத் தான் பேட்டை படத்தில் சொல்லியிருப்பார். செரினாவிக்கும் செல்விக்கும் இடைப்பட்ட தருணம் தான் மங்களம் என்று நினைக்கிறேன்.

காலா - செல்வி, நிஜமாவே அவனை காதலிச்சியா?? ஆஆஆ மழையை பாரு. (இதுவும் ஆண்களால் மட்டுமே முடியும்)

Credits - கார்த்திக் கண்ணன் | Karthik Kannan

Comments