Raavanan love scene

"தைரியம் கொடு. என் கோவத்த என்கிட்டேர்ந்து எடுக்காத! அது மட்டும் தான் என்ன காப்பாத்துது.
அவங்கள என்கிட்ட பிரியமா இருக்க விடாத!"
"உன்ன கெஞ்சி கேக்குறேன். கெட்டவங்கள கெட்டவங்களா காட்டு. உண்மையா காட்டாத!"
"எனக்கு சண்ட போட பலம் கொடு. ஆத்திரப்பட பலம் கொடு. உனக்கு இதுல என்ன கஷ்டம்?"
"பூச நேரத்துல கரடி மாதிரி வந்து கெடுத்துட்டனோ?
"அவுக எப்படிப்பட்ட ஆளு? உங்க எஸ்பி?"
"நல்லவரா? ரொம்ப நல்லவரோ?"
"கடவுள் மாதிரி.. போதுமா?"
"ஓய்! கடவுள்னா..
கடவுளேவா? அவதார புருசனா?
அப்பழுக்கில்லாதவரா?
எங்க பத்து தல சேர்ந்தாலும் அவருக்கு ஈடாக முடியாதோ?"
"கிட்ட கூட வர முடியாது!" "பாக்க எப்டி இருப்பாக? செக்க செவேல்னா? நல்லா தான் இருப்பாக..
கடவுள்லா.. வேற எப்டி இருக்க முடியும்?"
"நான் அவுகள பாக்கணுமே. ஒரு மட்டம். எப்பாடு பட்டாவது. கடவுள் எப்படி தான் இருக்கார்னு பாக்கணும்."
"எய்யா.. இப்படி முந்திக்கிட்டீரேனு பொட்டுன்னு கேட்டுறணும்!"
"பாசமா இருப்பாகளா?
சிரிக்க சிரிக்க வச்சுக்குவாரோ?"
"உங்களுக்கு? இஷ்டமா?"
"பொறாமையா இருக்கு சாமி! அப்படியே.. அடி வயிறுலாம் எரியுது."
"குருவம்மோய்!"
"உங்க கடவுள் எப்பாவது பொறாம பட்டுருக்காரா?
வீரைய்யாவுக்கு தான் பொறாம!"
"நான் மிருகம்.. காட்டான்.. கிராமத்தான்.. ஒடுக்கப்பட்டவன்."
"நான் எங்க? நீங்க எங்க? உங்க கடவுள் எங்கனு நெனச்சேன்.ஆனா இப்போ இந்த பொறாமை உள்ள புகுந்து உங்க எல்லாரையும் விட என்ன உசரமாகிடுச்சு!"
"யய்யா சாமி! இந்த பிசாசு.. அப்பன், அம்ம, ஆச, காதல், கத்திரிக்கா எல்லாத்தையும் விட பெருசாத்தோ!"
"குருவம்மோய்! ஏ! குருவம்மோய்!"
~~~
"என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிருமா"


Comments