Peranbu Songs Vaanthooral | வான்தூறல் Lyrics | Yuvan Shankar Raja

விதையை புரட்டி போட்டாலும்
விண்ணைப் பார்த்துத்தான் முளைக்கும்,
பேரன்பினால் வாழ்க்கையின்
கோணல்கள் நேர்படும்.

பருவம் கடந்து போனாலும்
அருகம்புல் சாகாது,
ஓர் தூறலில் மொத்தமாய்
பச்சையாய் மாறிடும்.

ஈரப்பதம் காற்றில் இருந்தால்
தூரத்திலே காடு தெரிந்தால்,
பக்கம்தானே நீர் நிலை என்று
பேசும் குரல்கள்.

மெல்லத்தானே சொல்லும் மாறும்!
சொல்லித்தானே சோகம் தீரும்!

மேகம் மட்டும் வானமில்லை!
தேகம் மட்டும் வாழ்க்கையில்லை!
புலன்களை கடந்துகூட இன்பம் இருக்கும்!



#Vaanthooral | #வான்தூறல் | #AnbeAnbin #அன்பேஅன்பின் | #சுமதிராம் | #Dhooramaai | #தூரமாய் | #வைரமுத்து | #Peranbu | #Mammootty | #Ram | #YuvanShankarRaja | #Kaviperarasu #Vairamuthu, #SumathiRam & #Karunakaran 😍🤔👌

Comments