திரும்பி வந்தால் இப்படி தான் இருக்க வேண்டும், மாஸ் காட்டிய ஹீரோக்கள்



தமிழ் சினிமாவில் எப்போதும் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்த நிலையில் இந்த இடத்தை பிடிக்க கடுமையாக போராடுவதுவிஜய், அஜித், சூர்யா தான்.
இவர்கள் மூவருக்குமே உலகமெங்கும் பல லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் ராஜாவாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் விஜய், அஜித், சூர்யா இந்த மூன்று பேரின் ரசிகர்களுக்கு சமீப காலமாக கொண்டாட்டம் தான்.
ஆம், அஜித் நடித்த கடைசி படம் வேதாளம் வசூல் சாதனை செய்தது, இது மட்டுமின்றி முதல் நாள் ரூ 15.5 கோடி வசூல் செய்து இன்றும் ஓப்பனிங்கில் முதலிடத்தில் உள்ளது.
விஜய் நடித்த தெறி 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. இதே வரிசையில் நீண்ட வருடமாக ஒரு சூப்பர் ஹிட் படத்திற்காக காத்திருந்த சூர்யாவிற்கு 24 நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
இந்த படமும் விரைவில் ரூ 100 கோடி கிளப்பில் இணையவுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் விஜய், அஜித், சூர்யா மூவருமே பழைய அதிரடிக்கு திரும்பிவிட்டனர். இந்த மூவருமே இந்த ஹிட் படங்களுக்கு முன்பு சுமாரான படங்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments