Vaanam Arukil Oru Vaanam | நியாய தராசு | Nyaya Tharasu
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம் பறவைகளின் கானம்
(வானம் அருகில் ஒரு வானம்...)
ஏழாண்டு காலம் இவள்
ஊர் பார்த்ததில்லை
கார் போகும் சாலை இவள்
கால் பார்த்ததில்லை
இன்றல்லவோ மண் பார்க்கிறாள்
இடைவேளையில் பண் கேட்கிறாள்
இமை ரெண்டும் ஆட மறந்து விட்டால்
வெளியேறினாள் கிளியாகினாள்
(வானம் அருகில் ஒரு வானம்...)
பூலோகம் சுகமே - இந்த
பொய் வாழ்க்கை சுகமே
பூந்தோட்டம் சுகமே - அட
போராட்டம் சுகமே
இவள் காண்பது புது தேசமா
இவள் கொண்டது மறு ஜென்மமா
கடந்து சென்ற காலம் கை வருமா
கண்ணீரிலே சந்தோஷமா
(வானம் அருகில் ஒரு வானம்...)
படம்: நியாய தராசு இசை: சங்கர்- கணேஷ் குரல்: K.J.ஜேசுதாஸ்
படம்: நியாய தராசு இசை: சங்கர்- கணேஷ் குரல்: K.J.ஜேசுதாஸ்
Comments
Post a Comment