Neeyum Naanum Anbe | நீயும் நானும் அன்பே | Atharvaa Murali, Nayanthara, VijaySethupathi | Hiphop Tamizha | Kabilan
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும்
தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும்
தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
தாய்மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே
உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே
என்னை உன்னில்
தாமதமாய் உன்னை
கண்ட பின்பும்
தாய்மடியாய் வந்தாய்
நான் தூங்கவே
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
உன் தேவையை
நான் தீர்க்கவே
வெந்நீரில் மீனாய் நீந்துவேன்
உன் காதலை
கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்
உன் பாதியும்
என் மீதியும்
ஒன்றேதான் என்று
வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே
செத்து போகிறேன்
சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை பெண்ணே
நாளும் வாழலாம்
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும்
தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும்
தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
Comments
Post a Comment