Aararo Paada Ingu song | Aadhalal Kadhal Seiveer





ஆராரோ பாட இங்கு தாயும் இல்லை
உன்னை அல்லி செல்லம் கொஞ்ச யாரும் இல்லை
நீ மண்ணில் வந்து உதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்க வில்லை
விதி கண்ணை மூடி கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை
என் அன்பே என் அமுதே
இந்த காயம் ஆறிவிடும் தூங்கு
என் கண்ணே என் மணியே உன்னை தன்னந்தனியாய் நீ தூங்கு

ஆராரோ பாட இங்கு தாயும் இல்லை
உன்னை அல்லி செல்லம் கொஞ்ச யாரும் இல்லை

கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்
சேற்றிலே வளர்ந்த தாமரை மலரை போலவே நீ தோன்றினாய்
பூமி இது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது
தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்று கொள்ளு நல்லது
இந்த உலகம் என்பது இன்ப துன்பமுள்ள பாதையாட
நீ முட்டி மோதி எழு வழிகள் சொல்லி தரும் கீதையாட

நதியிலே விழுந்த இலை என உந்தன் பயணங்கள் தொடர்ந்து போகட்டும்
அலை வரும் அடுத்த திருப்பத்தில் உனது கரை எதிரிலே தோன்றிடும்
வேர் எங்கோ செடி எங்கோ நீ இங்கு தனியாய் போகிறாய்
வழி தவறி வீட்டில் வந்த பறவை போலவே பார்க்கிறாய்
நீ கடவுள் எழுதி வாய்த்த மண்ணில் வந்த ஒரு கவிதையாட
அதன் இடையில் இரு உயிர்கள் செய்த எழுத்து பிழை பாவமடா

ஆராரோ பாட இங்கு தாயும் இல்லை
உன்னை அல்லி செல்லம் கொஞ்ச யாரும் இல்லை
நீ மண்ணில் வந்து உதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்க வில்லை
விதி கண்ணை மூடி கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை

Comments

Popular Posts