இளைஞர்களின் வித்தியாசமான முயற்சிக்கு உதவிய சிம்பு

 Simbu

சிம்பு எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் வேறு ஒரு நடிகரின் படங்களின் ட்ரைலர், போஸ்டர் என வெளியிடுவார். இதில் எந்த ஈகோவும் அவருக்கு இல்லை.

இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்து அனைவரையும் கவர்ந்த படம் ராஜதந்திரம். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகிவிட்டது.
இதன் 6 நிமிட காட்சிகள் மட்டும் முதலில் வெளியிடவிருக்கின்றார்களாம், இது தமிழ் சினிமாவிற்கு புதிய முயற்சி என பலராலும் பாராட்டப்படுகின்றது.
இந்த 6 நிமிட காட்சியை சிம்பு சமீபத்தில் பார்த்து தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
.

Comments