ஷாருக்கானுடன் 5வது முறையாக மோதும் விஜய்
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்த 'ஃபேன்' திரைப்படமும் கிட்டத்தட்ட அதே தேதியில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
விஜய் மற்றும் ஷாருக்கான் படங்கள் மோதுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே இருவரது படங்களும் நான்கு முறை ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளது. 'தெறி' மற்றும் ஃபேன்' ஒரே நாளில் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டால் இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் விஜய்யின் வேலாயுதம், துப்பாக்கி, தலைவா மற்றும் கத்தி ஆகிய விஜய் படங்கள் வெளியான தினத்தில்தான் ஷாருக்கானின் Ra one, Jab Tak Hai Jaan, Chennai Express மற்றும் Happy New Year ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இரண்டு மிகப்பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் இரண்டு படங்களின் வசூலும் இதுவரை பாதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment