பரியன் - ஜோ | Pariyerum Perumal | பரியேறும் பெருமாள்
ஆண் பெண் உறவை அதனதன் போக்கிலேயே கையாளும் அவர்களே கையாண்டுக்கொள்ளும் காட்சிப்பொருட்கள் சினிமாக்களில் குறைவு. பரியேறும் பெருமாள் பரியன் - ஜோ உறவு எந்தவொரு காலநிலைக்குள்ளும் பொருந்தாத மையச்சித்தரிப்பு.
"மிச்சமீதி இருக்க கொஞ்சூண்டு நம்பிக்கையா இருக்கக்கூடாதா" என்ற ஒரு எண்ணத்தை எவளொருவள் விதைக்கிறாளோ அவளை பரியன்கள் எந்தவொரு உறவின் கோட்பாட்டிற்குள்ளும் அடக்கிவிடுவதில்லை.
இங்கு உறவின் முழுமைக்கு காதல் இரண்டாம்பட்சம். குறைந்தபட்ச நம்பிக்கையின் உருவமாகத் தெரிந்தால் அந்த உறவு ஓர் உன்னதம். விட்டுவிடக்கூடாத விரல்பிடி.
Comments
Post a Comment