Be Alone to Love ... Be Nude to Love ... Be Idiot to Love ...


காதலை தேடுவதை விட வேறு எந்த வகையிலும் நம்மை சிக்கல்படுத்திக் கொள்ள முடியாது. அதீத ஆர்வத்தோடே தேடுவோம். பழகுற நபர்கள்களில் அதிகம் "இவங்களா இருக்குமா"ன்னு ஒரு தடமாவது நினைத்திருப்போம். இன்னும் சில சாரார் புரிந்து தெரிந்த பிறகு வர வேண்டுமென அறிதலுக்காக நேரத்தை செலவிடுவார்கள். கடைசி வரை யாருமே நேசித்திருக்க போவதில்லை.
நாமாக தேடிட தேடிட காதல் கண்டடைதல் ஆகிடும். ஒரு பொருளானதுவ் அடையப்பட்டதும் அதன் மீதான் ஆர்வம்மும் ஈர்ப்பும் மெலிந்திடும். அப்படி தேடி துரத்தி விழுந்த காதல், நமக்கென ஒருவரின்றி தனித்து இருக்கின்றோமென்ற நினைப்பினால் மற்றொருவர் மீது எழுவதாய் அமைகிறது. அந்த காதலின் கால நிலை என்பது மிகவும் சிறுமையானதே. 
அதாவது காதலின் தீவிரம் என்பது கேள்விக்குறியில் சிக்கியிருப்பதாகிறது. அப்டி இல்லாது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காதல் பத்தின பிரக்ஞை இல்லாத பொழுதில் நேரிடும் சந்திப்பு , உங்கள சுத்தி இருக்க சம்பவங்களோ அல்லது நீங்களோ உங்களுக்கே தெரியாமல் அந்நியத்தன்மையில் அறிமுகமாகி பழகி வர்ற காதல் வேற ஒரு பரிமாணத்தில் பயணிக்கும். இயல்பு வாழ்க்கைல இந்த magic அதுக்கு ஏத்த மாதிரி நடக்கும். Charlieயை போல தானாய் வந்தடைந்த பயணியும், அந்நியம் நிறைந்தவர்களுமான காதலித்தல் அலாதி.


அதிலும் காதலின் அந்நியத்தனம் தருகிற குதூகலத்திலும், suspence - இலும் காதல் புதுப்பித்தபடியே இருக்கும். "உன்னாலே உன்னாலே" படத்தில் flightல கூட ஏறும் தீபிகாவின் வாழ்க்கை அவளோட past , அவளுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காதுன்னு அவனுக்கு தெரிந்திருக்காது. ஆனால் ஜானுவிற்கு பீட்சா பிடிக்கும், பெண்களிடம் காட்டும் ஆர்வம் பிடிக்காது என்றெல்லாம் தெரியும். அது அவனுக்கு தெரியும் என்பது ஜானுவிற்கும் தெரியும். பிரச்சனைக்கான இடம் அது தான். அவங்கள நீங்க எந்தளவு தெரிந்துக் கொள்ள முனைகிறீர்களோ அந்தளவு விலகல உருவாக்கிக்கறிங்க. உங்க காதலிக்கு நீங்க முதல் காதலராவோ இல்ல பத்தாவது காதலராகவோ இருக்கலாம். இல்லை நீங்களும் பல காதலையும் காமத்தையும் கடந்தவர்களாக இருக்கலாம். ஒருத்தவங்கள பத்தி தெரிந்ததும் இயல்பாகவே judgementக்கும் அதன் விளைவில் சலிப்படைதலுக்கும் நகர்த்தப்படுறோம்.
"காதலும் கடந்து போகும்" படத்தில யாழினி என்ற பெயர் கூட தெரியாமல் அவளுக்காக Risk எடுப்பதும் , பதறியடித்து ஓடுவதற்க்கும் பின்னாடி ஒரு சுவாரஸ்யம் இருக்கு தானே. அந்நியத்தன்மை தான் காதல இன்னும் வலுப்படுத்துமென தோணினது உண்டு. 
உண்மைய சொல்லனும்னா காதலிப்பதை யாருமே Define பண்ணிட முடியாது. ஆனா காதலோட சாரம்சத்த கண்டடைய முடியும். மனதால் செய்திடும் புணர்வு, உடலால் நிகழ்ந்திடும் புணர்வு இது தான். உங்க மனசு இன்னோரு மனசோட மூர்க்கமடைவதில் , எண்ணங்களின் அழுத்தங்கள் முத்தங்களுக்கு நகர்வதாக இருக்கும் பொழுது அந்த அந்நியத்தனம் ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் தரும். அதற்காக எதும் தெரியாத ஒரு நபரை நேசிக்க வேண்டுமென்று இல்லை. ஆனால் அப்படியெம் நேசிக்கலாம். thats all so nice.
ஒவ்வோருத்தருக்குள்ளவும் ஒரு persnol line இருக்கும் அந்த லைன் இருக்கறது ரொம்ப நல்லாருக்கும். அத தெரிஞ்சுக்கனும் முழுசா நம்ம காதலர தெரிஞ்சுக்கனும்னு இல்ல அவங்கள பற்றிய சிலது தெரியாமலும் இருக்கலாம். அது வெளிப்பட்ட பிறகு நீங்கள் பழகிய வழக்கமான காதலியலிற்கும், முத்தமிடலிற்கும் தான் மனசும், எண்ணமும் முற்படும்.மனது புரிந்துக்கப்படுவதற்கும், உணரப்படுவதற்கும் ரொம்ப வேறுபாடு இல்லைனாலும் கொஞ்சமா வேறுபாடு இருக்கு.


புரிந்துக் கொள்கிற பொழுது அவங்களுக்கானவங்களா நீங்களும் உங்களுக்கானவங்களா அவங்களும் மாறனும். ஆனா உணருகிற பொழுது you juz feel only..மழையை புரிந்துக் கொள்வதற்கு முனைவதில்லை உணர்வதற்கு தான் முனைகிறோம்.
அதற்கு அந்த மழையின் அந்நியம் உங்களுக்கு அந்நியமாக இருக்கறது. 
நாம அவங்க உணர்வ தான் புரிந்துக் கொள்ள போகிறோம். அவங்கள புரிந்துக் கொள்வது என்பது அவர்களின் விருப்பங்களை தான்.
என்ன சாப்பிடுவாங்க, என்ன நிறம் பிடிக்குமென்பது.
அவங்க உணர்வு புரிஞ்சிக்கறதுங்கிறது அவங்களோட அன்பு சார் விஷியங்கள். அவங்களுக்கு அழனும், முத்தமிடனும், ஒரு உரையாடல் வேணும், ஒரு பயணம் வேணும் , ஒரு இருப்பின் அவசியத்தில் நம்ம தேவைப்படுவதுமான அகம் சார்ந்த அவசிங்களுக்கே காதல் பெருந்துணையாகிறது.


உங்க காதலர் உங்களோட சேர்ந்து வேறு சிலரயும் காதலிக்கலாம். ஆனால் உங்களிடம் இருக்கும் பொழுதில் வெளிப்படுத்தும் காதல் அந்த நேரத்தில் பரிபூரணித்திருந்தால் போதும். அதன் பிறகு இருவருக்கும் அதை அசைபோடுதலில் உள்ள உலகம் தனிமை சார்ந்தது ,காதலிப்பதற்கான தனிமை.
காதலிக்க தனிமை ரொம்ப அவசியம். தனிமை தான் இன்னோரு குரல, உருவத்த, தேடி உங்கள நகர்த்தும். நகர்ந்த பிறகும் சில தனிமைகள் தான் உங்கள ஆழமா கவ்வி காதலிக்க வைக்கும் கூட.
இந்த தனிமை அவங்க எப்படியும் இருக்கும். #KadhalumKadandhuPogum - by Tamil Arasan
be alone to love, be nude to love, be idiot to love 

Comments