Actor Ajith Kumar travelled from Chennai to Bengaluru via Salem Athur yesterday with his bike.

சென்னையில் இருந்து, ஆத்தூர் வழியாக, பெங்களூருவுக்கு, நடிகர் அஜீத்குமார், பைக்கில் சென்றார்.

நேற்று மதியம், சென்னையில் இருந்து, புதியதாக வாங்கிய தனது, “பி.எம்.டபள்யூ., நிறுவனத்தின், 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கில், தலைவாசல் வழியாக, இரவு, 9 மணியளவில், காட்டுக்கோட்டை வந்தார்.

அப்போது, காட்டுக்கோட்டை சாலையோரத்தில் உள்ள, கிராமத்து ஹோட்டலில், தனது உதவியாளர்களுடன் சாப்பிட்டார். பந்தய ஆடை (ரேஸ் ட்ரஸ்) அணிந்து வந்து, கிராமத்து ஹோட்டலில் சாப்பிட்ட அவரை, ரசிகர்கள் கண்டு பிடித்து குவிந்தனர்.

பின், ரசிகர்களுடன் ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டதுடன், அனைவரையும் நலம் விசாரித்ததோடு, உணவு அருந்தும்படி கூறினார். பின்னர், 9.30 மணியளவில், பைக்கில், “சென்ஸார்’ பொருத்தி, ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஆத்தூர், வாழப்பாடி பைபாஸ் வழியாக, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவுக்கு, புறப்பட்டுச் சென்றார்.

காரில் உதவியாளர் , மற்றொரு பைக்கில் வந்த நண்பர், 20 நிமிட இடைவெளியில், அஜீத்குமாரை பின்தொடர்ந்து சென்றனர்.

நடிகர் அஜீத்குமார், “நிருபர்களிடம்’ கூறுகையில், “”சென்னையில் இருந்து, பெங்களூருவுக்கு ஓய்வு எடுக்க, பைக்கில் செல்கிறேன். வேறு தகவல் எதுவும் வேண்டாம்,” என்றார்.
 
 

Comments