விஸ்வரூபம்

விஸ்வரூபம் குறித்து வசந்தபாலன் !

 

'விஸ்வரூபம்' படத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவு குரலை எழுப்பி வருகிறார்கள்.

இயக்குனர் வசந்தபாலன் 'விஸ்வரூபம்' படம் குறித்து தனது ஃபேஸ்புக் இணையத்தில் தெரிவித்து இருப்பது :

நேற்று இரவு கொச்சினில் 'விஸ்வரூபம்' படம் பார்த்தேன். கதை முழுக்க சூடான், ஆப்கானிஸ்தான், அமெரிக்காவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒஸாமா பின் லேடனின் அல்கொய்தா தீவிரவாதக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசுகிறது. அவர்கள் அமெரிக்க போர்க்கைதிகளை அடைத்து வைத்திருப்பது, அல்கொய்தாவின் ஆயுதம், திட்டங்கள், போர் பயிற்சிமுறைகள், வாழ்க்கை,அவர்களின் குடும்பம், குழந்தைகள், வழிபாட்டுமுறை, தண்டனை முறை இவை பற்றி படம் விவரிக்கிறது.

படத்தில் வரும் தீவிரவாதிகளின் துணைத்தலைவன் தமிழில் பேசுகிறான். எப்படி தமிழ் தெரியும் என்று கமல் கேட்க கோயமுத்தூர் மதுரையில் தலைமறைவாக இருந்த போது கத்துக்கொண்டேன் என்று கூறுவான்.

இதைத் தவிர தமிழகத்தைப்பற்றி தமிழ் முஸ்லீம்களை பற்றி படத்தில் எதுவும் இல்லை.

உலகின் அதி பயங்கர தீவிரவாத அமைப்பான அல்கொய்தாவை பற்றி பேசுவதாலே ஒட்டமொத்த தமிழ் இந்திய முஸ்லீம்களை பற்றி பேசுவதாக கற்பனை செய்து கொண்டு ஒரு படத்தை தடை செய்வது வருந்தத்தக்கது.

படத்தை முழுதாக சரியாக புரிந்து கொண்டு நீதிமன்றம் நல்ல முடிவை தரும் என்று உங்களைப்போல நானும் எதிர்பார்க்கிறேன்." என்று தெரிவித்து இருக்கிறார்.

Comments