I Am Back. . !

Sachin Tendulkar. . !



சச்சின் சிறப்பான ஆட்டம். . !

                                      
                                         கொல்கத்தா டெஸ்டில் நேற்று 2 ரன் எடுத்தபோது, சர்வதேச போட்டிகளில் 34,000 ரன் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை மைல் கல்லை எட்டினார். 193 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடி அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 76 ரன் எடுத்த அவர், 11 இன்னிங்சில் முதல் முறையாக அரை சதம் கடந்தார்.



                                 சமீபகாலமாக ரன் குவிக்க தடுமாறி வந்த இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் இன்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளியபடுத்தினர். இந்த ஆட்டத்தில் அவரது ஷாட்கள் சிறப்பாக அமைந்தது. கடந்த ஒரு வருடமாக 1 சதத்தை மட்டும் அடித்திருக்கும் சச்சினுக்கு இன்றைய ஆட்டத்தில் பெரிய மன நிறைவை கொடுத்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ரன் குவித்தது மூலம், சர்வதேச போட்டியில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி) 34,000 ரன்களை கடந்து முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.



Comments