அவனைப் பற்றி தெரியுமா ?
அவனைப் பற்றி தெரியுமா ?
அளவுக்கு அதிகமாக அன்பு காட்டுவான். ஏதோ ஒரு இடத்துல அந்த அன்பு பொய்யாகிறப்போ அவனை அறியாமலேயே உடைஞ்சு போய் மனசுக்குள்ளே கூனிக்குறுகி அழுதுட்டு இருப்பான்..!
பிடிச்சவங்களுக்கு நம்பிக்கையா இருப்பான். அவனும் அவங்களுக்கு நம்பிக்கை கொடுப்பான். ஏதோ ஒரு கட்டத்துல அவங்க அவனுக்கு துரோகமே செஞ்சாலும் ரொம்ப கோபப்படுவான். ரொம்ப கத்துவான் இதை எல்லாம் அவன் மேல அவனே காமிச்சிக்கொள்ளுவான்..!
ஒரு கட்டத்துக்கு மேல அவன் அன்பு எல்லாம் தகுதியே இல்லாதவங்க கிட்ட தான் பொய்யாகிப் போய் இருக்கின்றது என்கிறத உணர்ந்து வாழ்க்கையே அவ்வளவு தான்ல என்று வாழ்க்கையை வெறுக்கிற நிலைமைக்கு வந்துருவான்...!
அட பாருங்க அவனோட அன்பை முழுசா அனுபவிச்சங்க எல்லாரும் அவன சுற்றி சந்தோசமா இருப்பாங்க..! அவனைத் தேட மாட்டாங்க. அவனைப் பற்றி பேசக் கூட விரும்ப மாட்டாங்க..! எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிகழ்விலும் அவனை எதிர்பார்க்க மாட்டாங்க..! அவனை miss பண்ண மாட்டாங்க..! ஏன் அவனை முக்கியமான ஒருத்தங்களா கூட நினைக்க மாட்டாங்க..! அவங்க பாட்டுக்கு move on ஆகிட்டு போயிடுவாங்க..!
ஆனால் அவன் ஏதோ தப்பு செய்தவன் எவராலும் தீண்டத்தகாதவன் யாரையோ அன்பின் பெயரைச் சொல்லி ஏமாற்றியவன் போல் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு எல்லோரையும் விட்டு ஒதுங்கி வாழ்வான்..! காரணம் அவன் அன்பின் வழியில் இழந்தவை அதிகம்...!
அவன் கண்ணீருடன் இணைந்த சிறு புன்னகையே அதற்கு சாட்சி..!
விலைமதிப்பற்ற பட்டியலில் அவனின் கண்ணீருக்கும் பிரதான இடம் உண்டு ..!
நீங்கள் அவனை காயப்படுவதாய் எண்ணி உண்மையான உறவை அலட்சியப்படுத்தி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்..!
நினைவிருக்கட்டும் அவனை ஏந்திக்கொள்ளும் கைகள்தான் உண்மையில் வரம் பெற்றவை..!
- Priyanka Thavarasa
Comments
Post a Comment