ஆரண்யகாண்டம் | Aaranya Kaandam Dialogues

“அதான் வெளியே சொல்லமாட்டேன்னு சொல்லிட்டாளே... அப்புறம் ஏன் அவ விரலை கடிச்சு துப்புன?”
“வெளியே சொன்னப்புறம் விரலை வெட்டி என்ன யூஸ்?”
“நாய் வேஷம் போட்டா குரைச்சுதான் ஆகணும், பசுபதி”
“நாய் வேஷம் போட்டா, வால் கூட ஆட்டலாம்”
“ஒரு முக்கியமான கேள்வி... உங்களுக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா?”
“சப்பையும் ஒரு ஆம்பளை தான்...
எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்”
"எதிராளியோட எதிராளி கூட்டாளி தான். ஆனா, அதை விட முக்கியம்.. அவங்க ரெண்டு பேரும் இன்னமும் எதிராளி தான்"
“உங்க அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?”
“அப்படி இல்ல, ஆனா அவர் எங்க அப்பா”
“இப்போ, ஒரு பணக்காரன் இருக்கான்... பிளசர் கார்ல வந்து இறங்குறான்னு வை.. போகையில, வேட்டி அவுந்து போகுது .. பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க ‘அடடா, பெரிய மனுஷன் வேட்டி அவுந்து விழுந்திடுச்சே’ அப்படின்னு சொல்லுவாங்க..
அதுவே, உன்னைப் போல என்னைப் போல ஆளுக்கு வேட்டி அவுந்து விழுகுதுன்னு வையேன் ‘தாயோலி, வேட்டி கட்ட தெரியுதா பாரு நாய்க்கு’ அப்படின்னு சொல்லுவாங்க ..
பணம் ரொம்ப முக்கியம்டா, கொடுக்காப்புளி”
“நான் ஓடாத மணிக்கூண்டுகிட்ட இருக்கேன், ஆனா எனக்கு நேரமே இல்ல”
“ஆனாலும், ஒரு உண்மையை ஒத்துக்கணும்டா கொடுக்காப்புளி... எங்கப்பனை விட, உங்கப்பன் புத்திசாலி”
“பயம் போகல, ஆனா தைரியம் வந்திடுச்சு”
“சாமி.. அப்போ நீங்க மனசுல நெனச்சுட்டு இருந்த அந்த ரெண்டு பூ?”
‘பிரபு... குஷ்பூ...”
“ஏய், வாடி வியாழக்கிழமை”ன்னா... வரலை, நான் சனிக்கிழமை”ன்ற…”
“கப்பு பாத்தா, மப்பு இல்ல சார்”
“மார்க்கெட் ரேட் 2 கோடி... நமக்குன்னா 50 லட்சத்துக்கு தரேன்ங்குறான்”
“ஏன்? அவங்க அக்கா என்னை லவ் பண்றாளா?”
“டேய் மவனே கொடுக்காப்புளி.. உங்கப்பனை ரெண்டு வார்த்தை கெட்ட வார்த்தையில வைடா...
இப்போ திட்டமாட்டான், அதான் டெக்னிக்”
“அப்போ, அந்த மூணாவது மாங்கா..”
“அது நீங்கதான் சார்”
“அப்பா நான் இருக்கேன்ல...”
“போயா, நீ வேஸ்ட்டு”
“வீடியோ ஃபோன்ல, நடிகைங்க எல்லாம் குளிக்கிறதை பார்க்கலாம்.. தெரியுமா?”
“இத்துனூண்டு ஸ்கிரீன்ல அத்துனூண்டு என்னடா பார்ப்ப?”
“உனக்கு ஏன் ரஜினி பிடிக்கும்?”
“ஏன்னா, அவரு ரஜினி”
“டேய், திருடிட்டாடா வந்த?
“இல்ல, எடுத்துட்டு வந்துட்டேன்”
“நீ மட்டும் உயிரோட இருந்திருந்த... த்தா, கொலை பண்ணியிருப்பேன்”
“நம்ம கூட சாமி இருக்கான்னேன்... இன்னையோட கடன் போச்சு, கஷ்டம் போச்சு, துன்பம் போச்சு, துயரம் போச்சு, இன்னல் போச்சு, இக்கட்டு போச்சு”
“எது தர்மம்?”
“எது தேவையோ, அதுவே தர்மம்”
“The best thing about being a woman is... it”s a man”s world”
#ஆரண்யகாண்டம் (2011)
வசனம் - தியாகராஜன் குமாரராஜா




Comments