Iyarkai Songs | Alaiye Alaiye | Shaam, Arun Vijay | Vidyasagar

https://www.youtube.com/watch?v=oNizWMBlMcg

அலையே அலையே அத்து மீறிடும் அலையே உந்தன் காதிலே காதல் சொன்னது யார் பிறந்தேன் பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன் கொஞ்ச காலமாய் மண்ணில் நானில்லை ஒரு துளியானேன் உன்னாலே இன்று கடலானேன் பெண்ணாலே என் உயிரெல்லாம் தேனாக ஒரு வார்த்தை சொன்னாலே (அலையே.. அலையே.. ) மொட்டுக்குள்ளே வாசம் போலே கட்டுப்பட்டு நின்றாயே முட்டிச்செல்லும் காற்றாய் வந்து தொட்டு திறந்து கொண்டேனே உனது ஊடல் தீராமல் எனது கடலில் மீன் இல்லை கருணை பார்வை நீ பார்த்தாய் கரையில் கூட மீன் தொல்லை முகத்திரையை கழட்டிக்கொண்டாய் சிறகுகளை அணிந்து கொண்டேன் அலையாடிய அலையாடிய கரையில் விளையாடிய விளையாடிய பறவை மடியேறுது மடியேறுது பார் வெளியே (அலையே.. அலையே.. ) பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை உந்தன் இதழில் தித்திக்க கண்ணே நான் ஓர் தூக்கமில்லை உந்தன் கண்ணில் ஒட்டிக்க எனது ஜீவன் தீர்ந்தாலும் எனது வாழ்வு உன்னோடு கிளைகள் வெளியில் போனாலும் வேரின் வாழ்வு மண்ணோடு நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில் நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில் கடலோ இடம் மாறிய பொழுதும் நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும் பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே..

Comments