தல 57 படத்தின் தலைப்பை தெரிந்து கொள்ள வேண்டுமா?

வீரம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் 'தல 57'. படத்தில் அஜீத் இன்டர்போல் ஏஜெண்டாக நடிக்கிறார்.
அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வாலும், பார்ட்னராக அக்ஷரா ஹாஸனும் நடிக்கிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பை ஐரோப்பாவில் முடித்துக் கொண்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது. ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடந்தபோது உள்ளூர் ஊடகம் அஜீத்தை இந்தியாவின் சில்வர்ஸ்டார் ஸ்டல்லோன் என்று கூறி புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. இந்நிலையில் சிவா தனது படத்திற்கு துருவன் என்று பெயர் வைத்ததாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் படத்திற்கு தலைப்பை தேர்வு செய்யவில்லையாம்.
தற்போதைக்கு 'தல 57' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் தலைப்பு பெரும்பாலும் வி(V) என்ற எழுத்தில் தான் துவங்குமாம். வீரம், வேதாளம், இந்த படத்திற்கு என்ன தலைப்போ தெரியவில்லை.
வேதாளம் படத்தின் தலைப்பையே அவ்வளவு சீக்கிரத்தில் சிவா அறிவிக்கவில்லை. இந்நிலையில் தல 57 படத்தின் தலைப்பு வரும் டிசம்பர் மாதம் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Comments