HBD Sourav Ganguly | Sourav Ganguly | Dada





சாப்பாட்டுக்கே கஷ்டம் ; கஷ்டப்படுற குடும்பம் ; ரொம்ப பாடுபட்டு தான் கிரிக்கெட் உள்ள வந்தாரு - இந்த மாதிரி எல்லாருக்கும் இருக்குற usual விக்ரமன் பட template எல்லாம் கெடயாது. அவரு ராஜ குடும்பத்த சேந்தவரு. வங்கத்துலையே பெரிய குடும்பம் இவரு குடும்பம் தான்.
அப்புடி இருந்தும் அவருக்கு ஆட்டத்து மேல இருந்த ஒரு ஈர்ப்பு , காதல் தான் நமக்கு இன்னிக்கு இவ்ளோ பெரிய அரசன கொடுத்துச்சு. 'அவன் ராஜா டா'னு சொல்றதுக்கு எல்லா தகுதியும் படச்ச மனுசன்.
1992 அப்போவே team உள்ள வந்தாலும் 'drinks தூக்குறது என் வேலை இல்ல'னு சண்ட போட்டதால 4 வருசம் உள்ள வர முடியாம போச்சு. Royal குடும்பம் இல்லயா...அந்த திமிரு இல்லாமயா இருக்கும். அப்பறம் 1996ல மறுபடியும் உள்ள வந்த மனுசன் Bengalகு மட்டும் இல்ல இந்திய கிரிக்கெட்டுக்கே அரசன் ஆனாரு.
God of offside , best captainனு நெறய பேரு நாளைக்கு அவரு அடிச்ச runs , centuries , எடுத்த wickets பத்தி பேசுவாங்க. ஆனா கங்குலி இந்த statistics என்கிற குறுகிய வட்டத்துக்குள்ள சுருங்கிட மாட்டாரு. அவரு சாதிச்சது ரொம்ப அதிகம்.
அகிம்சையா போராடிட்டு இருந்த கூட்டத்துல எப்புடி நேதாஜி துப்பாக்கிய தூக்கிட்டு போனாரோ அதே மாதிரி தான் கங்குலி. Batல மட்டும் இல்ல பேச்சுலையும் பதிலடி கொடுப்போம்னு ஆரம்பிச்சு விட்டது கங்குலி தான். கோலி இப்போ காட்டுற aggression நெருப்பு எல்லாம் கங்குலி ஊத்திட்டு போன எண்ணெயால தான்னு சொல்லிடலாம். அவ்ளோ இருக்கு.
Arnold கிட்ட "don't fuck around"னு சொன்னது , aggressionகு பேர் போன ஆஸ்திரேலியா காரனயே அப்புடி ஓரமா நில்லுனு tossல நிக்க வச்சது , steve waugh கூட toss போட trousers மட்டும் போட்டு வந்தது , broadகிட்ட go for a drink manனு சொல்லிட்டு சிக்ஸ் அடிச்சதுனு சேத்து வச்சிருந்த மொத்த aggressionம் team உள்ள வரக் காரணம் கங்குலி தான். அந்த lords celebration பத்தி புதுசா சொல்லவா வேணும்.
அப்பறம் ganguly finds. கங்குலி கண்டுபிடிச்ச திறமைகள். இந்த விசயத்துல தோனியே தோத்துடுவாரு. தோனி கண்டுபிடிச்ச ஆட்கள் கூட பாதிலையே காணாம போயிட்டாங்க. ஆனா கங்குலி கூட்டிட்டு வந்த சேவாக் , yuvi , bajji , zaheer எல்லாம் கடசி வரைக்கும் நின்னு அவரு பேர சொல்லிட்டு போனாங்க.
சேப்பல் எனக்கு phone பண்ண மாட்டாரு , kumble இல்லனா இந்த எடத்த விட்டுப் போவ மாட்டேன்னு அவரு எடுத்த அதிரடி எல்லாம் ரொம்ப அதிகம். சேவாக்க open பண்ண விட்டது , தோனிய top orderல போட்டதுனு சொல்லிட்டே போவலாம்.
யாருமே நெனைக்காத உச்சத்துக்கு எல்லாம் இந்தியாவ கூட்டிட்டு போய் விட்டாரு. 2000 CT final , 2002 CT finals , 2003 WC finals. அப்போ இருந்த ஆளுங்க கிட்ட கேட்டா சொல்லுவாங்க இது எவ்ளோ பெரிய விசயம்னு. அணி தரவரிசைல ரெண்டாவது வந்ததும் இவரு captaincy காலத்துல தான்.
ஜெயிக்கவே முடியாதுனு நெனச்ச overseas tours எல்லாம் ஜெயிக்க ஆரம்பிச்சது இவரு காலத்துல தான். டீம்ல இருந்து தூக்கிட்டா எப்புடி சண்ட போட்டு உள்ள வரனும்னு யுவராஜ்கு முன்னாடியே எங்களுக்கு காமிச்சு கொடுத்ததும் இவரு தான்.
கங்குலி அரசன் தான்...ஆனா chess boardல இருக்குற மாதிரி எல்லாத்தயும் முன்னாடி விட்டுட்டு ஒளியுற அரசன் இல்ல எங்க தாதா...பாகுபலி மாதிரி களத்துல எறங்கி சண்ட செஞ்ச அரசன்.
பாவம்...பாகுபலிக்கு அரசர் பதவி கெடைக்காத மாதிரி கங்குலிக்கு world cup கெடைக்கல.


கங்குலி எனும் பாகுபலி

Comments