குற்றம் கடிதல் - ‪‎Kuttram Kadithal‬


சின்னஞ்சிறு கிளியே பாடல் ஒலித்தது, கண்ணீரை தவிர்க்கமுடியலை. ஒரே பாடல் மூன்று குரல்கள், மூன்று உணர்வுகள். பாரதி தன்னை மூன்றாக பரிணமித்தான், இந்த படத்தை போல.





ஒரு ( ஆசிரியர் / ஆசிரியை ) தன்னோட தவறு செய்த ஒரு ( மாணவ / மாணவிய ) அடிக்கும் போது தன்ன அந்த ( மாணவனோட / மாணவியோட ) ( அப்பாவா / அம்மாவா ) நெனச்சி அடிக்கனும்...! ஆசிரியரா நெனச்சி அடிக்கக் கூடாது...!

1. பள்ளியில் Sex Education வேணும்னு சொல்றதுக்கு பதிலா அது எதுக்காக கட்டாயமா வேணும்னு ரொம்ப தெளிவா இயக்குநர் சொல்லிருக்காரு.

2. முத்தம் ! ஒரு குழந்தை புரிந்து கொண்ட முத்தம் அதனை ஆசிரியர் புரிந்து கொண்ட அர்த்தம் !
இத ரெண்டு Second ல “சின்னஞ்சிறு கிழியே ” ங்குற பாரதியார் பாட்டுல காட்டும் போது நமக்கே தூக்கி வாரிப் போடும் !
நம்மல அறியாம கை தட்டல் வர வைக்கும்..!

3. Christian Symbol அ Bike Mirror ல காட்டும் போது “ Objects in Mirror Are Closer Than They Appear' னு காட்டுற Shots..

4. என்னன்னு முழுசா தெரியாம தன்னோட Media கு Publicity ம் பணமும் கெடைக்கனும்னு நெனைக்குற மீடியா ஆட்களும்..

5. ஒரு தாய் - ஒரு பெண் / ஒரு ஆசிரியர் அழுகையும்...

6. பைக்க எட்டி ஒதைக்குற தோழன் கடைசில புத்தகம் பரிசா கொடுக்குற காட்சியும்...

7. மகாகவி பாரதியார பாடலாசிரியரா நியமிச்சதுலயும்..

8. தன்னோட மகள இழந்த கணவன் மனைவிய காட்சி அமைத்த விதமும்...

9. லாரி Driver சாப்பாடு வாங்கி வைக்கிற காட்சியும்...

10. ” நாகங்கள் ரெண்டு “ பாடல் வரிகள் ஒலிக்கும் காட்சிகள்...

11. கூத்து நிகழ்ச்சி வடிவமைப்பு...

12. ஒருதலைக் காதலன காட்டிய விதம்..

13. ஒரு விபத்து ஏற்பட்டால் பாதிக்கப் பட்டவர்கள் ( ம ) தவறு செய்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என காட்டிய விதத்திலும்...



விமர்சனம் இல்லை. இது ரசனை.


விமர்சிக்க நாம் யார் இந்த நிலத்தில்?.
எல்லாமே அந்நியமாகிவிட்ட உலகில் விமர்சனம் மட்டுமே நியாயமாக ஒலிக்கும் இந்த நிலத்தில்?


காற்றில் தடம் தெரியாமல் புரளும் அந்த கருப்பு carry bagயை போல, மெர்லின்.
அந்த சிறுவனை அடித்ததில் இருந்து தன் உடல் மேல் தானே கொள்ளும் பயம்.
வன்முறை நாம் தேர்வு செய்வதில்லை, வன்முறை நம்மை தேர்வு செய்கிறது. அன்று சிக்கியது மெர்லின்.
யாருக்கு தண்டனை, யாரால் தண்டனை?
the punishment என்று tagline படம் முழுவதும் ஒரே கேள்வி எழுப்புது.


எல்லாம் அவன் விளையாட்டு என்று படத்திலேயே பாடல் ஓடியும், பிரம்மா எல்லாம் விளையாட்டு என்று கடவுளை கை காட்டலை. மனித உணர்வுகள் மட்டுமே இங்கு விளையாடுகின்றன, விளயாடப்படுகின்றன.


மெர்லின் அடித்ததில் மயங்கிய செழியனை நானே பக்கத்துல இருந்து பாத்துக்குறேன் என்று மெர்லினும் கணவனும் சொல்லியும் அவர்களை பாதுகாப்பாக அனுப்பும் பள்ளிக்கூடம் செய்வது உதவி அல்ல, தந்திரம்.
ஆதிக்கம் நம்மை மனதுக்கு சரின்னு பட்டதை செய்யவிடாது, ஆத்மாங்கற சொல் அங்கு இல்லை. நாம் ஒரு ஸ்தாபனம், “நாங்க இருக்கோம்” என்ற வார்த்தை சொல்லும் தந்திரம் அது.


“தப்பு பண்றவன் நேர்ல வந்ததான் இனிமே தப்பே நடக்காது” என்று செழியன் மாமா கத்திவிட்டு செல்லும்போது புரியும் நமக்கு.


sex education பசங்களுக்கு தேவை என்பதில் படம் துவங்கினாலும் அது நம்ம எல்லாருக்கும் தேவை என்பது போல் மெல்ல உறைக்குது.
செழியன் தன சக மாணவிக்கு முத்தம் தந்ததில் விழுது அவனுக்கு அரை. அவனுக்கு அது சாதாரணம், மெர்லினுக்கு அது தவறு. இருவருமே கத்துக்க வேண்டிய நிலையில்தான் இருக்குறாங்க.


பள்ளிகூட விபத்துகளை ஒரு ஆசிரியரின் கண்ணோட்டத்தில் இருந்து கதைபோகுது. அவள் ஒரு சாதாரண கட்டமைப்புகளில் வளர்ந்த பெண். அவளால் அதிர்வுகளை தாங்கிக்க தெரியல. மனம் பிழற்கிறாள். கணவன் அவன் காலில் சிக்கியிருக்கும் carry bag எடுக்குறான். நான் இருக்கேன் என்கிறான்.


ஒரு விபத்து, பல மனசுகள், ஒரு குற்றம், ஒரு ப்ராயிசித்தம்.
இங்கு யாரும் காரணமில்லாமல் கெட்டவங்க இல்லை, புகழ கூடிய நல்லவங்க இல்லை.
அவர்கள் நாம்.
நாளை எல்லாம் நல்லாவே நடக்கும் என்ற உணர்வோடு உயிர்வாழ்பவர்கள்.


கடவுள் படம் பூரா வளம்வறார். ஆனா அவர் ஒரு பார்வையாளன் போலவேதான். எதுவும் செய்யல, வெறுமனே பாக்குறார், நம்மை போல, the passive observer.
we are the god என்று அங்கு கூறுவது செழியனுக்கு surgery செய்பவர்தான்.
இது நாத்திகம் அல்ல, மனிதம்.


இந்த படம் எழுதபட்டதை விட, தயாரிகபட்டதுதான் தைரியம். எதுவும் எனக்கு வேணாம் இந்தா பணம் எடுத்துக்கோ போ என்று சொன்ன christy இன் தைரியம்.
ஆனால் மக்கள் ரசிக்கிறார்கள், கை தட்டுகிறார்கள், அழுகிறார்கள், உணர்கிறார்கள். “ ரொம்ப மெதுவா போகுதுடா டேய்” என்று கத்திய ஒரே ஒரு போதை வஸ்துவை தவிர.


புது முகங்களால் ஒரு படைப்பு. அதுதான் இங்கு அழகே.
தனியாக ஒரு heroவை சுற்றி என்ற தளத்தில் இல்லாத ஒரு படம் என்பது இன்று நமக்கு தேவை.
உலகம் ஹீரோக்களால் இல்லை, நம்மை போன்ற சாமானியர்களால் மட்டுமே இயங்குது என்பது அடிக்கடி பிரம்மா நமக்கு ஞாபகப்படுதுகிறார்.


நடிப்பு இங்கே நடிக்கப்படவில்லை, அது ஒரு இயல்பான இயக்கத்தை கொண்டிருக்கிறது. இசை உணர்வுகளை திணிக்கவில்லை, மௌனம் நமக்கு முகத்தில் அறையும்போது மெல்ல நம்மை வருடுகிறது. வசனங்கள் நானும் நீயும் என்ன பேசுவோமோ அதான் அவர்களும், ஆம் நம்மை போன்ற மனிதர்கள்.


பிரம்மா ஒரு தாயை உருவாக்கிறார் இந்த படத்தில்.
பலர் மறுபிறப்பு அடைகின்றனர், மனசு லேசாகுது, உண்மை மூஞ்சியில் அடிக்குது, மௌனமாய் எழுந்து செல்வது இந்த படத்துக்கு நாம் செய்யும் மரியாதை.


படம் பாக்கும்போது முன்னே  இருந்த ஒரு தந்தை தன பையனிடம், “மிஸ் உன்ன இதே மாறி அடிக்குமா என்ன” என்று பயமாக கேக்குறார்.
இந்த படம் நாம் கேக்க மறந்த பக்கங்களை நம்முள் புரட்டுகிறது.


மதிப்பெண்கள் தேவையற்ற படம் இது.
மற்றவர்களுக்கு mark போட நாம் யார் மொதல?



இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்...
இதயெல்லாம் சரியா படைச்ச பிரம்மனுக்கும்‬ & மற்ற கலைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்...

Comments